செவ்வாய்க்கிழமை – விமர்சனம்

தமிழில் இந்த வாரம் வெளிவந்திருக்க கூடிய திரைப்படம் செவ்வாய்க்கிழமை. தெலுங்கில் உருவான மங்களவாரம் எனும் படம் தமிழில் செவ்வாய்க்கிழமை என்ற  தலைப்பில் வெளியானது. இயக்குநர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் முக்கிய பாத்திரத்த்ல்  பயல் ராஜ்புத் நடித்துள்ளார். காவல் துறை  கதாபாத்திரத்தில் நந்திதா ஸ்வேதா நடித்துள்ளார்.

இந்த படத்தின் ஃபிளாஷ்பேக்கில் ஒரு பெண் கொல்லப்படுகிறாள்.  அவள் பேயாக வந்து அனைவரையும் கொடூரமாக பழிதீர்க்கிறாள். திரைக்கதை மற்றும் மேக்கிங்கில் அஜய் பூபதி ஸ்கோர் செய்துள்ளார்.

மகாலக்‌ஷ்மிபுரம் எனும் ஊரில் ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் மர்மமான முறையில் ஊரில் மக்கள் இறக்கின்றனர். அவர்கள் இறந்த இடத்திற்கு அருகே வித்தியாசமான எச்சரிக்கை வாசகங்களும் எழுதப்பட்டுள்ளன.

மாயா எனும் போலீஸ் அதிகாரியாக அந்த ஊருக்கு வரும் நந்திதா இந்த தொடர் மரணம் குறித்து விசாரணையில் இறங்குகிறார். ஷைலு எனும் கதாபாத்திரத்தில் அந்த ஊரில் வாழ்ந்த ஹீரோயின் பயல் ராஜ்புத்துக்கு என்ன ஆனது? அவருக்கும் இந்த மரணங்களுக்கும் சம்பந்தம் இருக்கிறதா? என்பது தான் இந்த படத்தின் கதை.

இயக்குநர் அஜய் பூபதி மற்றும் இசையமைப்பாளர் அஜனீஷ் பின்னணி இசை படத்தில் வரும் காட்சியின் பயத்து கூட்டுகிறது.  மிகப் பெரிய பலமாக படத்திற்கு  அமைந்துள்ளது. படத்தின் முதல் பாதி முழுக்கவே திகில் கிளப்பும் காட்சிகள் நிறைந்து பேய் படம் பார்க்கும் உணர்வையே ரசிகர்களுக்கு கடத்துகிறது.

இடைவேளைக்கு முன்பாக ஹீரோயினான பயல் ராஜ்புத்தின் என்ட்ரியும் புல்லரிக்க செய்கிறது. அரை நிர்வானமாக வந்து செல்லும் நாயகி. வினோத நோயால் அதீத காமம் கொள்ளும் பெண். இந்த படத்தின் இரண்டாம் பாதியில் வித்தியாசமான ஒரு ட்விஸ்ட்டை இயக்குநர் வைத்துள்ளார்.

நிம்போமேனியாக் எனும் அரிய நோயால் பாதிக்கப்பட்டதாக இடைவேளைக்கு பிறகு வரும் கதையில் வருகிறது.

ஒட்டுமொத்த படத்தையும் தாங்கும் அளவுக்கு பயல் ராஜ்புத் கதையுடன் ஒன்றி நடித்திருக்கிறார்.

இசையமைப்பாளர் அஜனிஷின் பிஜிஎம் தியேட்டரில் ரசிகர்களை பீதியடைய செய்கிறது. தசரதி சிவேந்திராவின் ஒளிப்பதிவு அழகாகவும், ஆக்ரோஷமாகவும் படத்தின் கதையை தெளிவாக கடத்துகிறது செவ்வாய்கிழமை இளைஞர்கள் ரசித்து பார்க்கும் படமாக அமையும்.