Touring Talkies
100% Cinema

Wednesday, March 12, 2025

Touring Talkies

அசைவம் கொடூரமானது!: குமுறும்  வேதிகா  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மதராஸி’ மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேதிகா. பின்னர் ‘முனி’, சக்கரகட்டி, காளை, பரதேசி, காவியத்தலைவன், காஞ்சனா 3 உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். விலங்குகளுக்கு எதிரான கொடுமைகளுக்காக அவ்வப்போது குரல் கொடுத்து வரும் வேதிகா, இப்போது, விலங்குகளை இறைச்சிக்காகத் துன்புறுத்துவது போன்ற வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “இந்தியா உட்பட உலகம் முழுவதும் இறைச்சிக்காக கோழிகள், பன்றிகள், மாடுகள் மற்றும் ஆடுகள் எவ்வாறு சித்திரவதை செய்யப்படுகின்றன என்கிற கசப்பான உண்மை இது. இறைச்சிக்காக விலங்குகள் கொடுமைப்படுத்தப்படுகின்றன. இந்தப் படுகொலையின் ஒரு பகுதியாக நீங்கள் இருக்க விரும்புகிறீர்களா? விலங்குகளைக் கொல்வதற்கு நிதி வழங்குவதை உடனடியாக நிறுத்துங்கள். வன்முறையில்லாத சைவத்தைத் தேர்வு செய்யுங்கள்” என்று தெரிவித்துள்ளார்

- Advertisement -

Read more

Local News