Wednesday, April 10, 2024

திரைவிமர்சனம்: வட்டார வழக்கு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கண்ணுசாமி ராமசந்திரன் இயக்கத்தில் இளையராஜா இசையில் காதல், கிராமம் பின்னணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘வட்டார வழக்கு.

மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் இரு பங்காளி குடும்பங்களிடயே பல தலைமுறைகளாக  பகை இருந்து வருகிறது. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நம்ம நாயகன் சேந்தன் இன்னொரு குடும்பத்தில் உள்ள சிலரை கொன்று விடுகிறார். இந்த கொலைக்கு பழி வாங்க முயல்கிறார்கள் கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்தினர். இந்த கதையை  வட்டார மனிதர்களின் எமோஷனலாக தந்துள்ளார் இயக்குநர்.

படத்தில் பெரும்பான்மையான நடிகர்கள் கதை நடக்கும் இடத்தில் இருக்கும் மக்களையே நடிக்க வைத்துள்ளார் இயக்குனர்.  இதுவே இப்படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. இவர்களின் உடல் மொழியும் வசன உச்சரிப்பும் படம் பார்க்கும் நம்மை ஒரு கிராமத்திற்கு அழைத்து சென்று விடுகிறது.    ரவீனா ரவி இதற்கு முன்பு லவ் டுடே, மாமன்னன் ஆகிய படங்களில் நடித்திருந்தாலும்   இந்த படத்தில் மண்ணின் பெண்ணாக, கிராமத்து ஆசிரியராக  தொட்டிச்சி  கதா பாத்திரத்தில் ஒரு சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இப்படத்தின் நாயகனாக  சந்தோஷ் ஏற்கனவே டுலெட் படத்தில் நடித்து கவனம் பெற்றவர். இப்படத்தில் ஒரு கிராமத்து முரட்டு மனிதனாக, கோபத்தையும் காதலையும் சரிவிதத்தில் கொடுத்துள்ளார்.

இளையராஜாவின்  பின்னணி இசை படத்தின் பலத்தை கூட்டுக்கிறது. படத்தின் கதை 1987 கால கட்டத்தில் நடப்பது போன்று கதை அமைத்திருக்கின்றனர். இந்த காலகட்டத்தில் ராஜாவின் இசையில் வெளியான சில பாடல்கள் அவ்வப்பொழுது பின்னணியில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

சுரேஷின் ஒளிப்பதிவில் கரிசல் காட்டின் காட்சிகள் கண்முன் நிறுத்தியுள்ளார்.

வட்டார வழக்கு  ஆடம்பரம் இல்லாத  ஒரு கிராமத்து வாழ்க்கையில் நம்மையும்  சேர்த்து பயணிக்க வைக்கிறார் இயக்குனர் கண்ணுசாமி ராமசந்திரன்.

 

- Advertisement -

Read more

Local News