Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

“வாரிசுடு”: ரிலீஸ் தேதி மாற்றம்?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டியைகை ஒட்டி வரும் 11ம் தேதி வெளியாகிறது. அதே போல, தெலுங்கானா, ஆந்திர மாநிலங்களில், ‘வாரிசுடு’ என்ற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாவதாக அறிவிக்கப்பட்டது.

தமிழ் வாரிசு படத்துக்க தணிக்கை சன்றிதழ் கிடைத்துவிட்டது.  அடுத்து படம் வெளியாக உள்ள வெளிநாடுகள் சிலவற்றில் தணிக்கைக்காக அனுப்பப்பட்டு உள்ளது. ஆனால், படத்தின் பிரதி முழுமையாக தயாராகவில்லை என்ற காரணத்தினால் தணிக்கைகுழு, சான்றிதழ் அளிக்க தாமதமாகும் என கூறப்படுகிறது.

தவிர ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் தெலுங்கு பதிப்பு இன்னும் தயாராகவில்லை என்றும் அதற்கான தணிக்கை நாளை –  திங்கட்கிழமை – நடைபெறவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால் 11ஆம் தேதி வெளியாகவுள்ள வாரிசு படத்தின் தெலுங்கு பதிப்பு, வேறு தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக தெலுங்கு சினிமா  இணைய இதழ்களில் தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

Read more

Local News