சூப்பர் குட் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான ஆர்.பி.செளத்ரி தயாரிப்பில், இயக்குநர் சந்தோஷ் ராஜனின் இயக்கத்தில், நடிகர் ஜீவா நாயகனாக நடித்திருக்கும் ‘வரலாறு முக்கியம்’ படத்திற்கு தமிழகத்தில் 300 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இந்த ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம்தான், தற்போது இளைஞர்கள் மத்தியில் ட்ரெண்ட்டிங்கில் பேசுபொருளாக உள்ளது.
இயக்குநர் சந்தோஷ் ராஜனின் வெற்றி அவரின் அறிமுகத்திலேயே நடிகர் ஜீவா மற்றும் சூப்பர் குட் ஃபிலிம் தயாரிப்பு நிறுவனத்தோடு ‘களத்தில் சந்திப்போம்’ படத்தில் தொடங்கியது. அந்த வகையில் குடும்பங்களைக் கவர்ந்து திரையரங்குகளில் பார்த்து கொண்டாடும்படியான படமாக ‘வரலாறு முக்கியம்’ உருவாகி இருக்கிறது.
திறமையும், அழகும் ஒன்றிணைந்த நடிகைகளான காஷ்மீரா பர்தேஷி மற்றும் ப்ரக்யா நாக்ரா ஆகியோர் படத்தின் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விடிவி கணேஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் தங்கள் நகைச்சுவை மூலம் பார்வையாளர்களை சிரிக்க வைப்பார்கள். இவர்களுடன் கே.எஸ். ரவிக்குமார், சரண்யா பொன்வண்ணன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் தங்களது இயல்பான நடிப்பின் மூலம் படத்திற்கு வலு சேர்த்து உள்ளனர்.
இசை – சந்தோஷ் நாராயணன், எழுத்து, இயக்கம் – சந்தோஷ் ராஜன், ஒளிப்பதிவு – சக்தி சரவணன், படத் தொகுப்பு – ஸ்ரீகாந்த் N.B., கலை இயக்கம் – A.R.மோகன், ஆடை வடிவமைப்பு – வாசுகி பாஸ்கர், சண்டைப் பயிற்சி இயக்கம் – சக்தி சரவணன்.
இந்த ‘வரலாறு முக்கியம்’ திரைப்படம் அனைத்து வகையான ரசிகர்களைக் கவரும் வகையில்தான் உருவாக்கப்பட்டுள்ளது.
இளைஞர்களைக் கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தத் திரைப்படம் வரும் டிசம்பர் 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்தப் படத்திற்கு தமிழகத்தில் 300 திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
தற்போது வெளியாகியுள்ள படத்தின் டிரெயிலர் பார்வையாளர்களை ஈர்த்து, படம் குறித்தான எதிர்ப்பார்பையும் அதிகரித்துள்ளது. மேலும் 100% எண்டர்டெயினராக இருக்கும் என்ற உத்திரவாதத்தையும் டிரெயிலர் கொடுத்துள்ளது.
கமர்ஷியல் மற்றும் பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரங்களை நடிகர் ஜீவா தேர்ந்தெடுத்து நடிக்கும்போது அந்தப் படங்கள் அவருக்கு வெற்றியையே தந்துள்ளன. இந்தப் படமும் அவருக்கான வெற்றியைக் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.