விஜய் படத்தில் நடிக்க வடிவேலு மறுத்தார் என்றால் நம்ப முடிகிறதா? சமீபத்தில் ஒரு பேட்டியில் இதை வடிவேலுவே கூறியிருக்கிறார்.
விஜய் நடித்த குருவி படத்திற்காக உதய நிதி வடிவேலுவை அணுகினாராம். கதையை கேட்ட வடிவேலு இதில் எனக்கு ஏற்ற மாதிரி கதை இல்லையே என்று சொல்லி நடிக்க முடியாது என கூறிவிட்டாராம்.
உதய நிதியும் பெருந்தன்மையுடன் சென்று விட மீண்டும் ஆதவன் படத்திற்காகவும் வடிவேலுவை உதய நிதி கேட்டிருக்கிறார். அதன் கதை பிடித்துப் போக அந்தப் படத்தில் நடித்தாராம். குருவி படத்தை மறுத்த வடிவேலுவுக்கு பதிலாக விவேக் நடித்திருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற மேலும் பல சுவாரஸ்யமான சினிமா செய்திகளை அறிய கீழ்க்கண்ட லிங்க்கை கிளிக் செய்யுங்கள்..