வடிவேலு, இளையராஜா இணைந்து நடித்திருக்க வேண்டிய படம்!

இளையராஜாவிடம் வடிவேலு, மோதிரத்தை பரிசாக பெற்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. “இளையராஜாவின் மோதிரம்” என்ற படத்தின் துவக்கவிழாவில் எடுக்கப்பட்ட புகைப்படம் தான் இது. கவிஞர் வாலியின் கதை, திரைக்கதை, வசனம், எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் துவக்கப்பட்ட படம். இளையராஜாவும்  நடிப்பதாக இருந்தது.

ஒரு கட்டத்தில் அவர் தயங்கினார். இதைக் கேள்விப்பட்ட ரஜினிகாந்த், இளையராஜா நடிக்கவிருந்த வேடத்தில் தான் நடிப்பதாகவும், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கலாம் என்றும் என்று வாலியை அணுகினார்.

ஆனால் வாலி, “எஸ்பி.முத்துராமன் இயக்கினால் மட்டுமே இந்த கதையை கொடுப்பேன்| என்று மறுத்துவிட்டாராம். பின்னர் இந்த படம் அப்படியே கைவிடப்பட்டது.