Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

பிக்பாஸ்-6 நிகழ்ச்சியில் இன்று நடந்த ‘வாடி-போடி’, ‘வாடா-போடா’ சண்டை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் இன்றைக்கு பங்கேற்பாளர்கிடையே மிகவும் மோசமான மோதல் நிகழ்ந்துள்ளது.

சிறைக்கு அனுப்புவதற்காக 3 போட்டியாளர்களைத் தேர்வு செய்யும்படி பிக்பாஸ் கூறியதற்காக நடந்த பிரச்சினையில் அசீம், ஆயிஷா, விக்ரமன் மூவரிடையே எழுந்த வாய்த் தகராறு கடைசியாக டாஸ்மாக் கடை சண்டையில் வந்து முடிந்துள்ளது.

பெண் போட்டியாளர் என்றும் பாராமல் ஆயிஷாவை போடி, வாடி என்றழைத்தார் அசீம். இதைத் தட்டிக் கேட்ட விக்ரமனையும், வாடா போடா என்று அழைத்து டென்ஷனை கூட்டினார் அசீம்.

பதிலுக்கு ஆயிஷாவும் தனது செருப்பைக் கழட்டிக் காட்டி “அடிச்சிருவேன்” என்று அசீமை மிரட்டினார். “அடிச்சுப் பாருடி.. வாடி” என்று அசீமும் கோபத்துடன் கத்த.. நிகழ்ச்சி ஏக ரகளையானது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதுவரையிலும் இல்லாத வகையில் நடந்த ஒரு அநாகரிகமான நிகழ்ச்சி இதுதான் என்று பிக்பாஸ் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

நாளை பிக்பாஸூக்கு வரும் கமல்ஹாசன் அசீம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்ற பிக்பாஸ் சீஸனில் பேருந்தில் செல்லும்போது ஜாலியாக நடந்த ஒரு நிகழ்ச்சியை கூறிய  நடிகர் சரவணன் பெண்களை இழிவு செய்து விட்டதாக உடனே நிகழ்ச்சியில் இருந்து வெளியே தள்ளிய பிக்பாஸ், இப்போது பெண்களிடம் அவமரியாதையாக “வாடி, போடி” என்று பேசிய அசீம் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -

Read more

Local News