Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

பெண் தாதாவாக அம்பிகா நடிக்கும் ‘வடசேரி’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகர் விஷ்ணு பிரியன் நாயகனாக நடிக்கும் புதிய படம் உருவாகிறது. படத்திற்கு ‘வடசேரி’ என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மாளவிகா மேனன் நாயகியாக நடிக்கிறார். வில்லன் வேடத்தில் வின்சென்ட் அசோகன் நடிக்கிறார்.

இசை – ஆர்.எஸ்.ரவிப்பிரியன், ஒளிப்பதிவு – சுபாஷ். படத் தொகுப்பு – சாபு ஜோஸப், சண்டை இயக்கம் – ராம்போ ராஜ்குமார், நடன இயக்கம் – ராதிகா, கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – நக்கீரன்.

‘வடசேரி’ படம் பற்றி இயக்குநர் நக்கீரன் பேசும்போது, “இந்த ‘வடசேரி’ திரைப்படம் ஆக்சன், காதல் கலந்த கமர்ஷியல் திரைப்படம். பிரபல பெண் தாதாவின் மகன் வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் திரைப்படத்திற்காக சில  மாற்றங்கள் திரைக்கதையில் செய்திருக்கிறோம்.

தாதாவின் மகனாக நாயகன் விஷ்ணு பிரியன் நடித்திருக்கிறார். இந்தக் கேரக்டருக்காக கடும் பயிற்சியெடுத்து உடல் எடையை அதிகப்படுத்தி ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். படத்தின் ஆக்சன் காட்சிகள் இருந்தாலும், காதல் காட்சிகளும் அதற்கு இணையாக இருக்கும்.

ரவுடியான ஹீரோவுக்கும், ஆச்சாரமான குடும்பத்தைச் சேர்ந்த ஹீரோயினுக்கும் இடையில் காதல் மலர்கிறது. தடைகளைக் கடந்து இந்தக் காதல் ஜோடி எப்படி ஒன்று சேர்கிறார்கள் என்பதைத்தான் திரைக்கதையில் சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்கிறோம்.

பொதுவாக அனைத்துப் படங்களிலும் தாதாக்களாக ஆண்களைத்தான் காட்டுவார்கள். ஆனால் இதில் கொஞ்சம் வித்தியாசமாக பெண் தாதாவைக் காட்டியிருக்கிறோம். இந்தக் கதாபாத்திரத்தில் நடிகை அம்பிகா நடித்திருக்கிறார். கதையைக் கேட்டதும் எந்த சந்தேகமும் கேட்காமல் உடனேயே ஓகே சொல்லி நடித்துக் கொடுத்தார்…” என்றார் இயக்குநர் நக்கீரன்.

- Advertisement -

Read more

Local News