விமர்சனம்: வாத்தி

தனுஷ் நடிப்பில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படம் இன்று வெளியாகி உள்ளது.

முதல் முறையாக வாத்தியார் கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்திருந்ததே இப்படத்தின் மீது மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதைத் தாண்டி இப்படத்தின் வா வாத்தி பாடல், ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு எதிர்பார்ப்பை அதிகரித்தது.

90களில் துவங்குகிறது படம். கல்வித் தந்தையான சமுத்திரகனி, அரசு பள்ளிகளையும் தன் வசம் கொண்டு வர திட்டமிடுகிறார். அதன்படி, அரசு பள்ளிகளுக்கு தானே தரமான ஆசிரியர்களை அனுப்பி தரத்தை உயர்த்துவதாக கூறுகிறார். லஞ்சம் கொடுத்து காரியத்தையும் சாதிக்கிறார். அரசு பள்ளிகளுக்கு இரண்டாம் தர ஆசிரியர்களை அனுப்புகிறார்.

அப்படி அனுப்பப்பட்டவர்தான் தனுஷ். அவரோ சிறப்பாக பாடம் நடத்தி, மாணவர்களை தேர்ச்சி பெற செய்கிறார்.

இதனால் ஆத்திரமடையும் சமுத்திரகனி, என்ன செய்கிறார்.. அதை தனுஷ் எப்படி எதிர்கொள்கிறார் என்பதே கதை.

தனுஷ் வழக்கம் போல் தன்னுடைய நடிப்பினால் மொத்த படத்தையும் தாங்கி நிற்கிறார். மாணவர்களை எப்படியாவது படிக்கவைத்து விட வேண்டும், படிப்பு தான் மரியாதையை தேடி தரும் என்று போராடும் தனுஷின் நடிப்பு சிறப்பு.

கதநாயகியாக தன்னுடைய முதல் தமிழ் படத்திலேயே ஈர்த்துள்ளார் சம்யுக்தா. வில்லனாக வரும் சமுத்திரக்கனி மிரட்டுகிறார்.

‘கல்வியில் கிடைக்கும் பணம் அரசியலில் கிடைக்காது’ என்று அவர் கூறும் வசனம் எதார்த்த சூழ்நிலையை வெளிப்படுத்துகிறது.

அவருடைய வில்லத்தமான கதாபாத்திரத்தை

மேலும், சாய் குமார், ஆடுகளம் நரேன், தனிகெல்லா பரணி உள்ளிட்டோர் கச்சிதமாக அவரவர் கதாபாத்திரத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளனர்.

இயக்குனர் வெங்கி அட்லூரி எடுத்துக்கொண்ட கதைக்களம் இன்றைய சமுதாயத்திற்கு – கல்வி குறித்த புரிதலுக்கு – மிகவும் தேவையானது.

ஜி.வி. பிரகாஷின் வா வாத்தி பாடல் கவனத்தை கவர்கின்றன. பின்னணி இசையும் சிறப்பு.

தனுஷ், சமுத்திரக்கனி உள்ளிட்டோரின் சிறப்பான நடிப்பு, நடிப்பு, ஜி.வி-யின் ரசிக்கவைக்கும் இசை, நல்ல கருத்தை சொன்ன விதம் என சிறந்த படமாக விளங்குகிறது வாத்தி.