விமர்சனம்: வான் மூன்று

ஆஹா தமிழ் ஒ. டி. டி. தளத்தில் வான் மூன்று என்ற திரைப்படம் வெளியாக இருக்கிறது. சினிமாக்காரன் என்ற தயாரிப்பு நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை முருகேஷ் இயக்க,  டெல்லி கணேஷ், அம்மு அபிராமி, லீலா சாம்சன் முக்கிய காதபத்திரங்களில் நடித்துளார்கள்.

மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெறும் மூன்று நபர்கள் – அவர்கள் குடும்பத்தினர் ந்திக்கும் பிரச்சனைகளை வைத்து கதை நகர்கிறது. மனைவியின் உயிரை காப்பாற்ற பணமில்லாமல் தவிக்கும் டெல்லி கணேஷ், காதல் தோல்வியால் தற்கொலைக்கு முயற்சி செய்து காப்பாற்றப்பட்ட

அம்மு அபிராமி, வீட்டின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்த ஒரு ஜோடி!

படத்தின் பல காட்சிகள்  வசனங்களிலேயே கழிகிறது. ஆனாலும் சலிப்பு அடையாத அளவுக்கு கொண்டு சென்று இருக்கிறார் இயக்குநர்.

(“பையன் நல்லா இருக்கான்.. ஆனாலும் நம்ம சிகிச்சைக்காக அவனை கஸ்டப்படுத்தக் கூடாது!”)

டெல்லி கணேஷ் , பரிதவிக்கும் வயதான கணவரை கண்முன் நிறுத்துகிறார்.  மனைவியை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலை, பணம் இல்லையே என்ற பரிதவிப்பு.. அற்புதம்.

மற்றவர்களும் தங்கள் பாத்திரம் அறிந்து நடித்து உள்ளனர்.

அஜய் மனோஜ் எடிட்டிங் கணகச்சிதம்.  படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் மருத்துவமனையில் நடந்தாலும்,  இயல்பான கேமரா கோணம் அலுக்காமல் கொண்டு செல்கிறது.