மறைந்த கவிஞர்கள் கண்ணதாசன், வாலி ஆகியோரின் பாடல்கள் மட்டுமல்ல.. அவர்களது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களும் ரசிக்கத்தக்கவை.
அப்படியோர் சம்பவத்தை வாலி கூறியருந்தார்..
“அப்போது மிக பிரபலமாக இருந்த இசை அமைப்பாளர் ஜி.கே.வெங்கடேசன் என்னிடம் மிகவும் அன்பாக பழகுவார். பாட்டு எழுத வாய்ப்பு தந்ததில்லை என்றாலும், என் நிலை அறிந்து அவ்வப்போது பண உதவி செய்வார்.
அதென்னவோ, பாடல் எழுதும் தகுதி எனக்கு வந்துவிட வில்லை என்பது அவரது கணிப்பு. ஒரு முறை அவர், ‘கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக சேர். நான் அவரிடம் சொல்லிவிட்டேன். மாதம் ரூ. 300 சம்பளம்0’ என்றார்.
நான் மறுத்தேன். அதோடு, ‘ஒரு டெயிலரிடம் உதவியாளராக சேர்ந்தால் கடைசி வரை உதவியாளராகத்தான் இருக்க முடியும். அதே போல்தான் இதுவும்’ என்றேன்.
இதக் கேட்ட ஜி.கே.வெங்கடேசன். “நீ உருப்படவே மாட்டடா” என கூறிவிட்டு ஆத்திரமாக சொல்லிவிட்டு சென்றுவிட்டார். பிறகு நான் பாடல் எழுதி என்னை நிலை நிறுத்திக்கொண்டேன். அப்போது அவர், ‘அன்று நீ எடுத்த முடிவு சரிதான்’ என நெகிழ்ந்துபோய் கூறினார்” என கூறி இருந்தார் வாலி.