Touring Talkies
100% Cinema

Tuesday, June 17, 2025

Touring Talkies

நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷின் ‛உப்பு கப்பு ரம்பு’ திரைப்படம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். அவர் நடிப்பில் கடைசியாக ஹிந்தியில் வெளியான ‛பேபி ஜான்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.  தற்போது ஆகஸ்ட் 27ம் தேதி அவரது நடிப்பில் வெளியாகவுள்ள படம் ‛ரிவால்வர் ரீட்டா’. இதனைத் தொடர்ந்து ‛அக்கா’ என்ற ஒரு வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். இதையதவிர, ஹிந்தியில் இன்னொரு புதிய படத்திலும் அவர் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்த நிலையில், அவர் தெலுங்கில் ‛உப்பு கப்புரம்பு’ என்ற படத்தில் நடித்துள்ளார். சத்தமாக பரபரப்பாக எதுவும் வெளிவராமல் அமைதியாக இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. இப்படத்தை இயக்கியுள்ளார் சசி, முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சுகாஸ் நடித்துள்ளார்.

90களில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ள இந்த திரைப்படம் முதலில் திரையரங்கில் வெளியாகும் நோக்கில் தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது சில காரணங்களால் இப்படம் வரும் ஜூலை 4ம் தேதி அமேசான் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிடப்படுகிறது. தெலுங்கு, தமிழ், மலையாளம் மற்றும் ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வெளியாக இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News