மறக்க முடியாத அந்த பாராட்டு!

லவ் டுடே திரைப்படத்தில் நாயகியின் தங்கையாக நடித்துள்ள அக்சயா உதயகுமாருக்கு வாய்ப்புகள் குவிந்துகொண்டு இருக்கிறதாம்.

“பொதுவாக ஒரு படம் வெற்றி பெற்றால் நாயகிகளுக்குத்தான் புது வாய்ப்புகள் வரும். தங்கை வேடத்தில் நடித்த எனக்கும் வாய்ப்புகள் ஏராளமாக வருவது ஆச்சரியமாகவும்  மகிழ்ச்சியாகவும் இருக்கிறது.

சிறு வயதில் இருந்தே நடனம் கற்றுக்கொண்டேன். பள்ளிப் படிப்பை முடித்ததுமே மாடலிங் துறையில் ஈடுபட்டேன். அப்படியே சினிமாவுக்கும் வந்தாயிற்று.

லவ் டுடே படத்ததில் சிறப்பாக நடித்திருப்பதாக பலரும் பாராட்டினார்கள். அதில் மறக்க முடியாத பாராட்டு..யாரோ முகம் தெரியாத ஒருவர் ட்விட்டரில், ‘அந்தப் பொண்ணு நல்லா நடிச்சிருக்கா.. அவளை வச்சு மூவி பண்ணுங்க’ என்று எழுதியிருந்ததுதான். முகம் தெரியாதவர்களின் அன்புக்கு பாத்திரமாகி இருக்கிறேன் என்பதைவிட வேறு என்ன மகிழ்ச்சி.. அங்கீகாரம் வேண்டும்” என நெகிழ்ச்சியாக கூறுகிறார்  அக்சயா.