Thursday, November 21, 2024

உள்ளூர் வரி, சொத்து வரி, மின் கட்டணங்களை நீக்கும்படி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கோரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

சினிமா தியேட்டர்களின் சொத்து வரி மற்றும் உள்ளூர் வரிகளை நீக்கும்படி புதிய முதல்வராக பொறுப்பேற்கவுள்ள மு.க.ஸ்டாலினிடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் கோரிக்கை விடுத்துள்ளார்.

திருப்பூர் சுப்ரமணியம் இன்று காலையில் இது தொடர்பாக பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

இந்தச் சந்திப்பில் அவர் பேசும்போது, “தற்போது தமிழகம் முழுவதும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தியேட்டரில் வேலை செய்பவர்களுக்கு சம்பளம் கொடு்க்க முடியாமலும், வரிகளைக் கட்ட முடியாமலும் தவிக்கிறோம்.

அதனால் புதிதாகப் பொறுப்பேற்கவிருக்கும் தமிழக அரசிடம் 2 கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

தற்போதைய ஊரடங்கு காலக்கட்டத்தில் மூடப்பட்டிருக்கும் எங்களது தியேட்டர்களுக்கு சொத்து வரி, மின் கட்டணம் போன்றவற்றிற்கு விலக்கு அளிக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்த சலுகைகளை வழங்கியிருக்கிறார்கள். தமிழகத்திலும் இந்தச் சலுகைகளை அமல்படுத்த வேண்டும்.

இரண்டாவதாக. ஏற்கெனவே இருக்கும் ஜி.எஸ்.டி. வரியே எங்களுக்குச் சுமையாக இருக்கும்போது ‘உள்ளூர் வரி’ என்று தனியாக 8 சதவிகிதத்தை நாங்கள் சுமந்து கொண்டிருக்கிறோம். இந்த வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இது போன்ற வரி இல்லை.

ஆறு மாதங்களில் இதை நீக்கிவிடுவோம் என்று சொல்லித்தான் வரியை கொண்டு வந்தார்கள். ஆனால் ஆண்டுகளாகியும் இதை இன்னும் நீக்கவில்லை. எனவே இந்த 8 சதவிகித வரியை தயவு செய்து நீக்க வேண்டும்.

இந்த வரியை நீக்கினாலே சினிமா கட்டணங்கள் 15 ரூபாய் அளவுக்குக் குறையும். இதனால் மக்கள் அதிகம் பேர் தியேட்டருக்கு வரும் சூழல் உருவாகி இந்தத் தொழிலும் செழிக்கும். இதை முதல்வராகப் பொறுப்பேற்கவிருக்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள் மனம் வைத்து செய்து கொடுத்தால் தமிழ்த் திரையுலகம் செழித்தோங்கும்..” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

- Advertisement -

Read more

Local News