உண்மைச் சம்பவம்:    த்ரிஷாவின் ‘தி ரோட்’ ட்ரெய்லர் எப்படி?

த்ரிஷா நடித்துள்ள புதிய படம் ‘தி ரோட்’. மதுரையில் கடந்த 2000 ஆம் ஆண்டின் துவக்கத்தில் நடைபெற்ற உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அருண் வசீகரன் எழுதி இயக்கியுள்ளார். சந்தோஷ் பிரதாப், டான்சிங் ரோஸ் ஷபீர், மியா ஜார்ஜ், வேல ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், விவேக் பிரசன்னா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். அக்.6ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.

ட்ரெய்லர் எப்படி?:

மதுரையில் என்எச் 44 நெடுஞ்சாலையில் தொடர்ச்சியாக விபத்துகள் நடக்கின்றன. திட்டமிட்டு நடத்தப்படும் இந்த விபத்துகளின் பின்னால் இருப்பது யார் என்ற விசாரணையில் இறங்குகிறார் த்ரிஷா.

த்ரில்லர் படத்துக்கே உண்டான தீவிரத்தன்மை படம் முழுவதும் இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே தெரிந்து கொள்ளமுடிகிறது. அதற்கான மூட்-ஐ சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கச்சிதமாக கடத்துகிறது. மேக்கம் இல்லாத முகத்துடன் ஒருவித சீரியஸ்தன்மையுடன் வருகிறார் த்ரிஷா.

மொத்தத்தில் ட்ரெய்லர் ஈர்க்கிறது.