மலையாள சினிமாவின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ், தற்போது ‘நரி வேட்டை’ என்ற புதிய திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் மே 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இப்படத்தை அனுராஜ் மனோகர் என்பவர் இயக்கியுள்ளார். இதற்கு முன் அவர் ஷேன் நிகாம் நடித்த ‘இஷ்க்’ என்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படம், இயக்குநர் சேரனுக்கு முதல் முறை மலையாளத் திரையுலகில் நடித்திருக்கின்ற வாய்ப்பாக அமைந்துள்ளது. இவர்களுடன் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் பிரியம்வட கிருஷ்ணனும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய இரு மொழிகளிலும் வெளியாகவுள்ளது.
இந்த திரைப்படம் உண்மையான சம்பவத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதால், ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் ஜேக்ஸ் பிஜாய். படத்தின் முதல் பாடலான ‘மின்னல்வாலா’ பாடலின் வீடியோவையும் அண்மையில் படக்குழு வெளியிட்டது. இந்நிலையில், படத்தின் டிரெய்லரையும் வெளியிட்டுள்ளனர். அந்த டிரெய்லர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.