டார்ச்சர்: இந்தித் திரையுலகைவிட்டு விலகிய நடிகை!

பஞ்சாபி நடிகையான சோனம் பஜ்வா தமிழில், கப்பல், காட்டேரி உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் அவர், “இந்தியில் பாலா, ஸ்ட்ரீட் டான்சர் 3 டி போன்ற படங்களில் நடித்த பிறகு எனக்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் தயாரிப்பாளர்களும், டைரக்டர்களும் உதட்டோடு உதடு வைத்து முத்த காட்சிகளிலும், நெருக்கமான படுக்கை அறை காட்சிகளில் ஆபாசமாக நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.  பஞ்சாப் திரையுலகில்   எனக்கு நல்ல இமேஜ் இருக்கிறது. அதை கெடுத்துக்கொள்ள மனம் இல்லை. ஆகவே, இனி இந்தி படங்களில் நடிக்க வேண்டாம் என்று நானே விலகிவிட்டேன்” என்று சொல்லி இருக்கிறார்.