சாதனை படைத்தது விஜயின் ‘லியோ’ டைட்டில் புரோமோ..!

லோகேஷ் கனகராஜ் இயக்கததில் விஜய், த்ரிஷா உள்ளிட்டோர் நடிக்கும் புதிய படத்துக்கு தற்காலிகமாக  ‘தளபதி 67’ என்று பெயரிடப்பட்டது. நேற்று இப்படத்தின் பெயரை படக்குழு அறிவித்தது. இதற்கான ப்ரமோ வெளியிட்டதோடு, லியோ என்கிற டைட்டிலையும் அறிவித்தது.

இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது. ஆகவே இந்த ப்ரமோ முழுதும் ஆங்கிலத்தில் உள்ளது.

இந்நிலையில் வெளியிடப்பட்ட ஒரே நாளில் 32 மில்லியன் பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது இந்த ப்ரமோ.