Friday, April 12, 2024

விவசாயத்தைக் காக்கப் போராடும் ‘டைட்டில்’ திரைப்படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

DBK இன்டர்நேஷ்னல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் கம்பெனியின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லிபாபு தயாரிக்கும் படம் டைட்டில்.’

இந்தப் படத்தில் நாயகனாக விவசாயத்தில் விருப்பம் இல்லாத இளைஞனாக விஜித் நடித்திருக்கிறார். அஸ்வினி சந்திரசேகர் நாயகியாகவும் NRI ஏஜென்டாக மைம் கோபி மற்றும் மாரிமுத்து இருவரும் நடித்திருக்கிறார்கள். மற்றும் ரோபோ சங்கர், மதுமிதா, பிளாக் பாண்டி, ரேகா, கூல் சுரேஷ் நடித்துள்ளனர்.

எழுத்து, இயக்கம் – ரகோத் விஜய், ஒளிப்பதிவு – S.M.தங்கப்பாண்டியன், இசை – அனல் ஆகாஷ், படத் தொகுப்பு – விது.ஜீவா, பாடல்கள் – லோகன், கலை – ஐயப்பன், சண்டை இயக்கம் – மிரட்டல் செல்வா, நடனம் – ராபர்ட் ராக், தயாரிப்பு மேற்பார்வை – வேல்மணி, தயாரிப்பு – டில்லிபாபு.K.

NRI மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, விவசாயிகளிடம் இருந்து எந்த இடைஞ்சலும், பிரச்சனைகளும் இல்லாமல் நிலங்களை வாங்கிக் கொடுக்கும் ஒரு கும்பலுக்கும், விவசாயத்தை மேன்மையாகவும், மண்ணை தெய்வமாகவும் நினைக்கும் குடும்பத்திற்கும் இடையே நடக்கும் பிரச்சனைகள்தான் இந்தப் படத்தின் கதை.

விவசாயிகளின் நிலங்களைப் பறிக்க கார்ப்பரேட் நிறுவனத்தினர் போடும் திட்டங்கள், அவற்றை விவசாயிகள் எப்படி முறியடித்து தங்களது நிலத்தை காக்கின்றனர் என்பதை விறுவிறுப்பான திரைக்கதையில் சொல்லியிருக்கிறார்கள்.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

- Advertisement -

Read more

Local News