சார்பட்டா பரம்பரை மூலம் கவனம் ஈர்த்த நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் ‘அநீதி’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இவர் ஒரு பேட்டியில்,“ இயக்குநர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதை சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என் நோக்கம். நான் தேர்வு செய்யும் கேரக்டர்கள் பெரும்பாலும் சவாலானவையாகவே அமையும். நான் தமிழ் பேசும் நடிகையாக இருப்பதால் எனக்கு வரவேற்பு தான் இங்கு அதிகம் இருந்தது. முதலில் என்னை நிராகரித்தவர்கள் கூட சார்பட்டா பரம்பரை படத்துக்குப் பிறகு என்னை அழைத்துப் பேசுகின்றனர். இதையே என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன்” என்றார்.