Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

குழந்தைகளை பயமுறுத்த வரும் ‘டாடி’ ஜான் விஜய்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஷாடோ லைட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள புதிய திரைப்படம் ‘தூநேரி’.

இப்படத்தில் கதையின் நாயகனாக சார்பட்டா பரம்பரை’ புகழ் ‘டாடி’ ஜான் விஜய் நடித்துள்ளார். கதாநாயகனாக நிவின் கார்த்திக் கதாநாயகியாக மியா்ரீ நடித்துள்ளார்.

கலையரசன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கைலேஷ் குமார் மற்றும் ஆலன் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

பல விளம்பர படங்களை இயக்கியிருக்கும் சுனில் டிக்சன் முதல்முறையாக இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இவர் கமல் நடிப்பில் வெளியான ‘ஆளவந்தான்’, ‘தெனாலி’, ரஜினி நடிப்பில் வெளியான ‘பாபா’, ‘குசேலன்’ உள்ளிட்ட பல படங்களுக்கு விஷுவல் எபெக்ட் இயக்குராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும், சவுந்தர்யா ரஜினிகாந்த் வைத்திருக்கும் விஷுவல் எபெக்ட் ஸ்டூடியோவில் 4 வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.

இந்தப் படம் இயக்குநர் சுனில் டிக்சன் பேசுகையில், “தூநேரி என்பது ஊட்டிக்கு அருகில் இருக்கும் ஊரின் பெயர். அந்த ஊர்தான் கதைக் களம் என்பதால் அதுவே படத்தின் தலைப்பாகியுள்ளது. குழந்தைகளை மையமாக வைத்து ஹாரர் திரில்லர் பாணியில் இப்படம் உருவாகியுள்ளது. ஜான் விஜய்யின் கதாபாத்திரம் குழந்தைகளை பயமுறுத்தும் அளவிற்கு உருவாக்கப்பட்டிருக்கிறது..” என்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு, திருவனந்தபுரம், சென்னை உள்ளிட்ட இடங்களில் 70 நாட்கள் நடைபெற்றது.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர் ஆகியவை வெளியாகி இருக்கும் நிலையில், விரைவில் வெள்ளித்திரையில் வெளியிட படக் குழுவினர் தயாராகி வருகின்றனர்.

- Advertisement -

Read more

Local News