நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக அவருக்கே உண்டான பாணியில் வலம் வருகிறார். அவரது நடிப்புக்கு என்றே தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. மாரி,ஜகமே தந்திரம், வேலையில்லா பட்டதாரி போன்ற திரைப்படங்கள் தனுஷுக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்தது.
ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தனுஷ் நடிகர் கார்த்தி பற்றி பகிர்ந்து கொண்டார்.பருத்திவீரன் படம் வந்தபிறகு நான் பார்க்க நேரம் கிடைக்கவில்லை. இயக்குனர் வெற்றிமாறன் சார் மதுரையை மையமாக கொண்ட ஆடுகளம் ஆரம்பிக்கும் போது கார்த்தியின் பருத்திவீரன் படத்தில் இருந்து எதுவும் காப்பி அடிக்க கூடாதுன்னு நினைத்தேன்.
படம் பார்த்துட்டு வெற்றிமாறன் சாரிடம் சொன்னேன் மதுரை ஸ்லாங் இதுதான். இதை தவிர்த்து எப்படி என்னால் நடிக்க முடியும் என்றேன். அப்பத்தான் எனக்கு கார்த்தி மீது அளவுகடந்த மரியாதை ஏற்பட்டது என்றார் தனுஷ்.