சமீபத்தில் பேட்டி அளித்த இயக்குநர் பா.ரஞ்சித், தனது வெற்றிக்கான இரு காரணங்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார்.
“எந்த ஒரு கதை தோன்றினாலும் உடனே ஸ்கிரிப்ட் எழுத உட்கார்ந்துவிட மாட்டேன். அந்த கதைக்குத் தேவையான கதைக்களத்தைத் தேடி செல்வேன். அங்குள்ள மனிதர்கள், சூழல் குறித்து ஆய்வு செய்வேன். முதல் படமான அட்டகத்தியில் இருந்து இன்று வரை அப்படித்தான். அதே போல அட்டகத்தி படம் வரும் முன்பே, சார்பேட்டா கதை தோன்றிவிட்டது. ஆகவே அது குறித்து அப்போதே பல விசயங்களை சேகரிக்க ஆரம்பித்தேன்.
அடுத்து, எனது கேமரா ஊருக்குள்.. அதாவது மக்கள் வசிப்பிடத்தி்ல் இருக்கும். காட்சிகளுக்கு நடுவே ஆட்கள் வந்துபோய்க்கொண்டு இருப்பார்கள். அப்போததான் அந்த களத்தில் தாங்களும் இருக்கிறோம் என்ற உணர்வு ரசிகர்களுக்கு வரும். இந்த இர காரணங்களும் என் படங்களில் வெற்றிக்கு காரணம் என நினைக்கிறேன்” என்றார்.