Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“டைட்டிலை விட்டுக் கொடுக்க 50 லட்சம் கேட்கிறார்கள்” – நடிகர் சசிகுமார் குற்றச்சாட்டு

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

செந்தூர் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில், சத்திய சிவாவின் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள  ‘நான் மிருகமாய் மாற’ திரைப்படம் வரும் நவம்பர் 18-ம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில்  படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மதியம் பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சசிகுமார் “இந்தப் படத்திற்கு முதலில் காமன்மேன் என்றுதான் பெயர் வைக்கப்பட்டிருந்தது. பின்னர் அந்த தலைப்பினை வேறு சிலர் பதிவு செய்திருந்ததால் தலைப்பை மாற்ற வேண்டிய கட்டாயம் வந்தது.

அந்தத் தலைப்பு படத்தின் கதைக்குப் பொருத்தமாக இருந்தாலும் தலைப்பை பெற முடியவில்லை. இப்போதெல்லாம் படத்தின் தலைப்புக்காக 25 லட்சம், 50 லட்சம் என்று கேட்கிறார்கள். இது நமக்குக் கட்டுப்படியாகாது என்பதால் தலைப்பு ‘நான் மிருகமாய் மாற’ என்று மாற்றப்பட்டது.

இந்தப் படத்தில் வன்முறை காட்சிகள் அதிகமாக இருக்கும்.  எனினும் குழந்தை, மனைவி என்று கதையில் ஒரு சராசரி மனிதனின் உணர்ச்சிகள் சரியாக பயன்படுத்தப்பட்டிருக்கும்.

ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம் அளித்துள்ளது என்றுதான் கூற வேண்டும். பாடலே இல்லாத திரைப்படத்தில் முதன்முறையாக பணியாற்றியுள்ளேன். படத்தில் நடனமும் இல்லை என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

எப்பொழுதும் ஒரு கிராமத்து கதாநாயகனாக வயலில் வேட்டியுடன் சுற்றித் திரிந்த எனக்கு ஒலிப் பொறியாளர் கதாபாத்திரம் மிகவும் வித்தியாசமாக இருந்தது. இந்தக் கதாபாத்திரத்திற்காக ஒலிப் பொறியாளர்கள் லட்சுமி நாராயணன் மற்றும் உதயகுமார் அவர்களை கூர்ந்து கவனித்தேன்.

படத்தில் அனைத்துமே புதியதாக இருக்கும். இதற்காக அனைவரும் கடினமாக உழைத்து உள்ளோம்.  படக்குழுவினர் அனைவரும் தங்களது முக்கியத்துவத்தை உணர்ந்து சிறப்பாக பங்களித்து பணியாற்றியுள்ளனர்.

படம் இப்படி இருக்கு, அப்படி இருக்கு என்று சொல்லல.. நீங்க பார்த்துட்டு சொல்லுங்க படம் எப்படி இருக்குன்னு..?” என்று தன் பாணியில் சொல்லி முடித்தார் சசிகுமார்.



- Advertisement -

Read more

Local News