லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார் பிரபல இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா. பாலிவுட் மற்றும் ஹாலிவுட் திரைப்படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வரும் அவர், சமீபத்தில் அளித்துள்ள பேட்டியில், “துணிகளை துவைப்பது எனக்கு மிகவும் கடினமாக இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “என் மாமியார், துணிகளை எவ்வாறு துவைப்பது என்பதை எனக்கு கற்றுக் கொடுத்தார். அதற்குபின், என் துணிகளை அவரே துவைத்து வைத்து விட்டார். துணிகளை இஸ்திரி செய்து மடிப்பது சுலபம். ஆனால் அவற்றை துவைப்பது மிகவும் சிரமமான வேலை,” என்றார்.
மேலும், “2000ஆம் ஆண்டு நான் உலக அழகி பட்டத்தை வென்றபோது, என் மாமியார் தொலைக்காட்சியில் அதை பார்த்து மகிழ்ந்ததாக சொல்லியுள்ளார்,” என்றும் பிரியங்கா சோப்ரா தனது பேட்டியில் பகிர்ந்துள்ளார். தற்போது ராஜமெளலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் SSMB29 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.