Tuesday, August 13, 2024

பறையரில் இருந்து பறைய எடு!: சர்ச்சையை கிளப்பும்  ‘தமிழ்க்குடிமகன்’ ட்ரைலர் நிகில்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பெட்டிக்கடை மற்றும் பகிரி படங்களை இயக்கியவர் இசக்கி கார்வாணன். இவரது இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகியுள்ள படம், ‘தமிழ்க்குடிமகன்’.  இதில், இயக்குநர்கள் எஸ்.ஏ. சந்திர சேகர், சேரன் மற்றும்  லால், மறைந்த நடிகர் மயில்சாமி, வேல ராம மூர்த்தி, சென்ராயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரைலரை  தற்போது வெளியாகி உள்ளது. இதில்,  கிராமப்புறத்தில் ஆதிக்க சாதியைச் சார்ந்த ஒருவர் இறந்து விடுகிறார். அவரை சடங்குகள் செய்து அடக்க செய்ய வேண்டும் என்பதால், பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவரை அழைக்கிறார்கள், ஆனால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் வரமறுக்கவே, பிரச்சனை ஆகிறது. இதற்காக அருகில் உள்ள ஊரில் உள்ளவர்களை அழைக்கச் செல்வது போலவும், ஆனால் அந்த முயற்சி தோல்வி அடைவதால், தங்கள் சொந்த ஊரில் உள்ள பட்டியலினத்தைச் சேர்ந்தவரையே மீண்டும் அழைக்கிறார்கள். அவர் வர மறுக்கவே பிரச்சனை ஏற்படுகிறது.

இதனால் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர் காவல் துறையையும், நீதி மன்றத்தையும் அணுகுகிறார், அதன் பின்னர் நடப்பது க்ளைமேக்ஸ் காட்சியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் இயக்குநர் சேரன் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த  கிராம நிர்வாக அலுவலராக  நடிக்கிறார்.

சேரனை இறுதிச் சடங்குகள் செய்ய அழைக்கும் காட்சியில்,  அவரை, “ பெரிய மைசூர் மகாராஜா பேரன் இவரு..போடா” என கூறுவது போன்ற வசனம் உள்ளது.

அதேபோல், சேரனின் மனைவியாக இருப்பவர், “அனைவரும் காந்தியைப் போலவும் பெரியாரைப் போலவும் இருந்துவிட்டால் ஊர் உலகத்தில் பிரச்னை இருக்காதுல” என கூறுவது போன்ற வசனமும் இடம் பெற்றுள்ளது.

வழக்குரைஞராக வரும் எஸ்.ஏ. சந்திர சேகர், பறையர் என்ற வார்த்தையில் இருந்து பறையை எடுத்துவிட்டால் ஐயர் மட்டும் இருக்கும், அப்பறம் என்ன நாட்டில் உள்ள அனைத்து பிரச்னையும் இருக்காது’ என கூறும் வசனமும், ’உங்களுக்கு கோமனம் கட்டியுட்டது நாங்கதான், படிக்கவெச்சது நாங்கதான், சமூக நீதி வாங்கிக்கொடுத்தது நாங்கதான் என கூறும் ஒருவர் கூட இவரது போராட்டத்திற்கு ஆதரவு தந்தார்களா? இல்லை.. காரணம் ஜாதியை வைத்துதான் அவர்கள் அரசியல் செய்து வருகின்றனர்’ என்ற வசனம் என ட்ரைலர்  பரபரப்பை ஏறபடுத்தி உள்ளது.

 

- Advertisement -

Read more

Local News