Tuesday, November 19, 2024

தி வில்லேஜ் – விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஹாரர்,திரில்லர் பாணியில் அமேசான் ப்ரைமில் வெளிவந்துள்ள வெப் தொடர் தான் தி வில்லேஜ். மிலந் ராவ் இயக்கத்தில் உருவான இந்த வெப் தொடரில் ஆர்யா நாயகனாக  நடித்துள்ளார். இந்த வெப் தொடர் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.

தி வில்லேஜ் கதைக்களம்

மருத்துவராக இருக்கும் ஆர்யா தனது குடும்ன் நாகப்பட்டினத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார். அப்போது கட்டியல் என்ற கிராமத்தில் கார் பிரேக் டவுன் ஆகி நின்றுவிடுகிறது.

மர்மங்களை உள்ளடக்கிய  அந்த கிராமத்தில் தனது மனைவி மற்றும் குழந்தையை காரில் இருக்க சொல்லிவிட்டு ஊருக்குள் சென்று யாரையாவது உதவிக்கு அழைக்க செல்கிறார் நாயகன் ஆர்யா.கிராமத்தில் இருப்பவர்கள் அது பயங்கரமான ஊர் நாங்கள் வரமாட்டோம் என முதலில் மறுக்கின்றனர் பின் ஒத்துக் கொள்கின்றனர்.நான்கு பேரும் ஆர்யாவுடன் வருகின்றனர்.

திரும்பி வந்து பார்க்கும்போது ஆர்யாவின் மனைவி, குழந்தை மற்றும் காரையும் காணவில்லை. அதன்பின் என்ன நடந்தது? இதற்கெல்லாம்  யார் காரணம் என்பதே தி வில்லேஜ் வெப் தொடரின் மீதி கதை.

வெப் தொடர் பற்றிய அலசல் முதல் எபிசோட் நம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துவிட்டது. ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக அமைத்திருந்தார் இயக்குனர்.

6 எபிசோட்கள் கொண்ட இந்த வெப் தொடர் ஹாரர், தில்லர் விறுவிறுப்பு குறையாமல் பட்டைய கிளப்பிவிட்டது.வித்தியாசமான  கதைக்களம் லெவலில் இருக்கிறது.

நடிகர்களின் நடிப்பு அருமை, குறிப்பாக ஆடுகளம் நரேனின் மகளாக வருபவர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்த வெப் தொடரின் மிகப்பெரிய மைனஸ் என்றால் பிளாஷ் பேக் போர்ஷன் மற்றும் மேக்கப் தான்.

இந்த வெப் தொடர் மொத்த 4 மணி நேரம் 15 நிமிடம் ஓடக்கூடியது. திகில் நிறைந்த பார்க்க கூடிய ஒரு முக்கிய தமிழ் வெப் தொடராக தான் தி வில்லேஜ் அமைந்துள்ளது.

 

- Advertisement -

Read more

Local News