Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

தனுஷின் குபேரா பட ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் வெளியான ‘ராயன்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘இட்லி கடை’ என்ற புதிய படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்கிடையில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘குபேரா’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.’குபேரா’ படம் தனுஷின் 51-வது படமாக உருவாகிறது. ஸ்ரீவெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மூன்று மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இதில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும், பிரபல தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு திருப்பதி, தாய்லாந்து மற்றும் மும்பை ஆகிய இடங்களில் நடைபெற்றது. சமீபத்தில் முதல் லுக் போஸ்டர் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து, நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் கதாபாத்திர அறிமுக வீடியோவும் வெளியிடப்பட்டது.

தற்போது, இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முன்பாக இப்படம் வரும் மார்ச் மாதத்தில் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இப்படம் ஜூன் 20ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பு தனுஷின் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

Read more

Local News