Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பா.ரஞ்சித் இயக்கும் ‘வெட்டுவம்’ படப்பிடிப்பு!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

“சார்பட்டா பரம்பரை” படத்திற்கு பின், இயக்குநர் பா. ரஞ்சித்துடன் நடிகர் ஆர்யா மீண்டும் “வெட்டுவம்” திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளார். இந்த படத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். கடந்த இரண்டு வாரங்களாக, காரைக்குடி பகுதியில் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தில், “பொன்னியின் செல்வன்” படத்தில் வானதியாக நடித்த சோபிதா துலிபாலா கதாநாயகியாக நடிக்கிறார். சோபிதா, நாகசைதன்யாவின் மனைவியாக திருமணத்திற்குப் பிறகு நடிக்கும் முதல் படமிது என கூறப்படுகிறது.

பா. ரஞ்சித்தின் தயாரிப்பில் வெளியான “பாட்டல் ராதா” படத்தின் ஒளிப்பதிவாளர் ரூபேஷ் ஷாஜி இந்த படத்திற்கும் ஒளிப்பதிவு செய்கிறார்.மேலும், “தங்கலான்” படத்திற்கும் இசையமைத்த ஜி.வி. பிரகாஷ், இந்த படத்திற்கும் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காரைக்குடியில் நடைபெற்று வரும் படப்பிடிப்பு முடிந்தவுடன், சென்னையில் தொடரும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

Read more

Local News