‘கங்குவா’ படத்திற்குப் பிறகு, நடிகர் சூர்யா தற்போது ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முதலில் கோவை மாவட்டத்தின் பொள்ளாச்சியில் தொடங்கி, தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, நடிகை திரிஷா, சூர்யாவின் ஜோடியாக நடித்துவருகிறார். மேலும், ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

சென்னையின் அருகே உள்ள கிழக்கு கடற்கரை சாலையில் வெளிச்சை எனும் பகுதியில் ‘சூர்யா 45’ படத்திற்கான ஒரு முக்கியக் காட்சியின் படப்பிடிப்பு நடைபெற இருந்தது. இதற்கான அனைத்து தயாரிப்புகளும் செய்யப்பட்ட நிலையில், அதிகாரிகள் அந்த இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தினர். அந்த நேரத்தில், படக்குழுவினர் உரிய அனுமதி பெறாமல் படப்பிடிப்பு நடத்த முயற்சித்திருப்பது தெரியவந்தது.

இதனால், அதிகாரிகள் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்தி, அனுமதி இல்லாமல் நடைபெறும் படப்பிடிப்பைத் தடை செய்தனர். மேலும், படப்பிடிப்பு கருவிகளை அப்புறப்படுத்துமாறு உத்தரவிடப்பட்டது. அதிகாரிகள், ஆர்.ஜே. படக்குழுவினரிடம்உரிய அனுமதி பெற்ற பிறகே படப்பிடிப்பு நடத்துமாறு அறிவுறுத்தினர்.