Wednesday, September 18, 2024

தொடங்கியது சிரஞ்சீவி நடிக்கும் ‘மெகா156’ படப்பிடிப்பு..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

முன்னணி தயாரிப்பு நிறுவனமான UV கிரியேஷன்ஸின் கீழ் பிம்பிசாரா புகழ் இயக்குநர் வசிஷ்டாவுடன் மெகாஸ்டார் சிரஞ்சீவி இணையும் மெகா ஃபேன்டஸி சாகச திரைப்படம் ’மெகா156’ திரைப்படம், தசரா விழாவன்று பெரும் கொண்டாட்டமாக துவங்கியது. இந்நிலையில் நேன்று, இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தின் படப்பிடிப்பை, படக்குழுவினர் தொடங்கியுள்ளனர்.

படப்பிடிப்பில் கிளாப் போர்டை டைரக்டர் மாருதி அவர்கள் அடித்து துவக்கி வைக்க, படக்குழுவினர் படத்தின் 9 வது காட்சியை படமாக்கினர். புகைப்படத்தின் பின்னணியில் அடர்ந்த காட்டை நாம் காணலாம். மேலும் படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி இணைந்துள்ளார்.

அறிவிப்பு போஸ்டரே பெரும் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியது. பின்னர், இரண்டு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வெளியிடப்பட்ட மற்ற இரண்டு போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில்  எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விக்ரம், வம்சி மற்றும் பிரமோத் ஆகியோர் இணைந்து பெரும் பொருட்செலவில் தயாரிக்கும் இப்படத்திற்கு  எம்எம் கீரவாணி இசையமைக்க, சோட்டா கே நாயுடு ஒளிப்பதிவு செய்கிறார்.

சாய் மாதவ் புர்ரா வசனங்களில்  கோத்தகிரி வெங்கடேஸ்வர ராவ் மற்றும் சந்தோஷ் காமிரெட்டி எடிட்டர்களாக பணியாற்றவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News