Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

வடிவேலுவுக்கு ஐடியா கொடுத்த அந்த ரவுடி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘பில்டிங் ஸ்ட்ராங்கு.. பேஸ்மெண்ட் வீக்கு’ என வடிவேலு செய்யும் காமெடி தெனாவெட்டு பிரபலம். பல படங்களில் இப்படி டுபாக்கூர் ரவுடியா வந்து மிரட்டியிருக்கிறார்.

“எப்படி இந்த கான்செப்டை பிடித்தீர்கள்”  என ஒரு பேட்டியில் அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர் ஒரு சம்பவத்தைச் சொன்னார்:

“மதுரை பைபாஸ் ரோட்ல ஒருத்தன் தள்ளாடிகிட்டே வந்தான். திடீர்னு நடு ரோட்ல தன்னோட துண்டை குறுக்கால போட்டு.. தைரியமிருந்தா இந்த துண்டை தாண்டி வாங்கடா என கூப்பாடு போட்டான். இவனுக்கு பயந்து லாரிங்க எல்லாம் ரெண்டு பக்கமும் வரிசையா நிக்குது. அரை மணி நேரம் ஆச்சு. லாரி ஓட்டுநர்கள் பயம் விலகாம பதைபதைப்போட காத்திருக்காங்க.

அப்போதான் பின்னால வந்து நின்ன லாரி டிரைவர், என்ன ஏதுன்னு தெரிஞ்சிக்க முன்னால நடந்து வந்து பார்த்தார். இந்த துண்டு பஞ்சாயத்துதான் பிரச்சினைக்குக் காரணம்னு தெரிஞ்சுது. டப்புனு அந்த துண்டு ரவுடி கன்னத்துல ஒரு போடு போட்டார். அவ்வளவுதான் அவன் ஓடிட்டான்.

இந்தமாதிரி  காமெடி எங்க மதுரையில சகஜம். இதையெல்லாம் பார்த்துதான், போலி ரவுடி கான்செப்ட பிடிச்சேன்” என்றார் வடிவேலு.

- Advertisement -

Read more

Local News