குணச்சித்திரம் மற்றும் வில்லன் கதாபாத்திரங்களில் முத்திரை பதிப்பவர் நடிகர் சம்பத்.
இவர் சமீபத்திய பேட்டி ஒன்றில், “விஜயுடன் திருப்பாச்சி, ஆதி, போக்கிரி, வேலாயுதம், புலி உள்ளிடட பல படங்களில் நடித்துள்ளேன். சண்டைக் காட்சிகளிலும் நடித்து இருக்கிறேன்.
குறிப்பாக, புலி படத்தில் வேதாளம் கதாபாத்திரம் மிகவும் பேசப்பட்டது.
ஆனால் ஒரு படப்பிடிப்பில் விஜய், ‘நீங்கள் யார்.. தெரியவில்லையே’ என்று கேட்டார். மனம் மிகவும் பாதிக்கப்பட்டுவிட்டது. விஜயிடம் பல நல்ல குணங்கள் உண்டு. ஆனால் இப்படி ஒரு கேள்வி கேட்டுவிட்டாரே என்கிற ஆதங்கம் எனக்கு ஏற்பட்டது” என சம்பத்குமார் தெரிவித்து இருக்கிறார்.