Friday, April 12, 2024

தியேட்டர்களில் படங்களை வெளியிட தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனைகள் விதித்துள்ளது

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக தியேட்டர்கள் மூடிக் கிடக்கின்றன.

வருகிற ஜூலை 15-ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தியேட்டர்களில் புதிய படங்களை திரையிட தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் தயாரிப்பாளர்களுக்கும் பங்கு தர வேண்டும் உள்ளிட்ட பல விஷயங்களை தியேட்டர் திறப்புக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கத்தினர், தியேட்டர் உரிமையாளர்களுக்கு கெடு விதித்துள்ளனர்.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாக் குழு கூட்டம் அந்தச் சங்கத்தின் தலைவரான ராமசாமியின் தலைமையில் நேற்று நடை பெற்றது. இதில் சில மு்க்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 

தியேட்டர்கள் அனைத்திலும் டிக்கெட் வழங்கும் முறை கணினி மயமாக்க வேண்டும். அதன் வெளிப்படைத் தன்மையை தயாரிப்பாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

தியேட்டரில் திரையிடப்படும் படங்களின் உரிமை முழுவதும் தயாரிப்பாளர்களுக்கே சொந்தம். தியேட்டர் உரிமையாளர்களுக்கு அதில் எந்த உரிமையும் இல்லை. இதனால் தயாரிப்பாளர்களின் அனுமதி பெற்ற பின்னரே ஆன்லைன் டிக்கெட் விற்பனை செய்ய வேண்டும்.

ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் வரும் வருமானம் தியேட்டர் உரிமையாளர்கள், புக்கிங் ஏஜென்ட் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு பிரித்து தர வேண்டும்.

தியேட்டர்களில் படங்களுக்கு இடையே வெளியாகும் விளம்பரங்களிலும் அந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கு பங்கு வேண்டும்.

ஜி.எஸ்.டி வரி செலுத்துவதில் உள்ள குளறுபடிகளை தீர்க்க, தியேட்டர்களின் பெயரிலேயே இனிமேல் வரி கட்ட வேண்டும். தனி நபர்களின் பெயர்களில் வரியைக் கட்டக் கூடாது.

தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனையைத் தீர்க்க,  சிண்டிகேட் அமைத்து செயல்படும் முறையை தியேட்டர் உரிமையாளர்கள் கலைக்க வேண்டும்.

சின்ன பட்ஜெட் படங்கள் தியேட்டரில் வெளியாகும்போது, மூன்று வகையாக டிக்கெட்டுகளை விற்க வேண்டும்.

இனி வரும் காலங்களில் படங்களை வெளியிடும்போது, வி.பி.எப்., கட்டணத்தை தயாரிப்பாளர்கள் செலுத்த மாட்டோம்.

இது குறித்த முடிவுகளை தியேட்டர் திறப்புக்கு முன்பே நடைமுறைப்படுத்த வேண்டும். இல்லையென்றால், அரசிடம் முறையிட்டு இதற்குத் தீர்வு காண வழி செய்யப்படும்.

இந்தத் தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஆக தியேட்டர்களைத் திறக்கலாம் என்று அரசு அனுமதியளித்தாலும் புதிய படங்கள் திரைக்கு வருவது இந்தப் பஞ்சாயத்துகள் முடிவுக்கு வந்தால்தான் தெரியும்.

- Advertisement -

Read more

Local News