Wednesday, November 20, 2024

வீரபாண்டிய கட்டபொம்மன்: எதிர்த்து நின்று ஜெயித்த சிவாஜி!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

1959 ஆம் வருடம் பி.ஆர்.பந்துலுவின் இயக்கத்தில் சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், பத்மினி, ராகினி ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த பெரும் வெற்றி பெற்ற படம் “வீரபாண்டிய கட்டபொம்மன்”.  இதில் சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மனாகவே வாழ்ந்தார்.

இப்படம் குறித்த சுரவாஸ்யமான தகவலை சிவாஜியே ஒரு முறை பேட்டியில் கூறியிருக்கிறார்.

அவர், “சிறு வயதில் “வீரபாண்டிய கட்டபொம்மன்” நாடகத்தை பார்த்த எனக்கு, கட்டபொம்மனாக நடிக்க என்ற ஆசை பிறந்தது. வெகுகாலம் கழித்து திரைத்துறையில் முக்கிய நடிகராக மாறினேன்.  பிறகு வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன். . அப்போது மிகப் பிரபலமான எழுத்தாளராக திகழ்ந்த சக்தி கிருஷ்ணசாமி என்ற எழுத்தாளரை அழைத்து “வீரபாண்டிய கட்டபொம்மன்” வரலாற்றை நாடகமாக வடிவமைக்கச் சொன்னேன். 

அதன் பிறகு அந்த நாடகத்தில் நடித்தேன். அந்த நாடகத்தில் எனது நடிப்பை பார்த்து ரசித்த  இயக்குனர் பி.ஆர்.பந்துலு, இந்த நாடகத்தை நான் படமாக்கலாம் என முடிவு செய்திருக்கிறேன், நீங்கள்தான் அதில் நடிக்க வேண்டும் என கூறினார். மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். இப்படித்தான்  “வீரபாண்டிய கட்டபொம்மன்” என்ற பிரம்மாண்ட படைப்பு உருவானது.

ஆனால் பல தடைகள் எழுந்தனய  ஆனந்த விகடன் பத்திரிக்கையில் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து ஒரு கதை வெளிவந்துகொண்டிருந்தது. அதன் அடிப்படையில் ஒரு படத்தை தயாரிக்கலாம என என ஆனந்த விகடனின் நிறுவனரும், ஜெமினி ஸ்டூடியோஸின் உரிமையாளாருமான எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டிருந்தார்.

அவரை நேரடியாக சந்திதது,“நீங்கள் எங்களுக்காக பெருந்தன்மையோடு விட்டுக்கொடுக்கவேண்டும்” என கோரிக்கை விடுத்தேன். அவரும் விட்டுக்கொடுத்தார்.

படப்பிடிப்புக்கு செல்லும் நேரத்தில், பிரபலமான பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் “வீரபாண்டிய கட்டபொம்மன் ஒரு தெலுங்கர். அவரது படத்தை எப்படி தமிழில் எடுக்கலாம்” என இத்திரைப்படத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தார். இதையெல்லாம் மீறி படம் உருவாகி பெரும் வெற்றி பெற்றது” என்று கூறியிருக்கிறார் சிவாஜி கணேசன்.

- Advertisement -

Read more

Local News