Touring Talkies
100% Cinema

Sunday, August 3, 2025

Touring Talkies

இந்தியாவின் டைட்டன் ரத்தன் டாட்டா தயாரித்த ஒரே திரைப்படம்… இதுதான்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடா வயதினாலும் உடல்நலக் குறைவுகளாலும் மும்பை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, நேற்று (அக்., 9) இரவு காலமானார். அவரின் மறைவிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைத்துறை பிரபலமான ரஜினிகாந்த் உட்பட பலர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் தங்களின் இரங்கலை தெரிவித்துள்ளனர். பல பிரபலங்கள் நேரடியாக வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக விளங்கியவர். பல்வேறு தொழில்களில் சாதித்து வந்தாலும், சினிமா துறையில் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. அவருக்கு சினிமா பார்க்க நேரமில்லை என்று முன்பு கூறியவர், பாலிவுட்டில் ஒரே ஒரு திரைப்படத்தை மட்டுமே தயாரித்துள்ளார்.

2004ல் விஜய் பட் இயக்கத்தில் அமிதாப் பச்சன், ஜான் ஆபிரஹாம் மற்றும் பிபாசா பாசு நடித்த திரைப்படமான ‛ஆட்பார்’யை ரத்தன் டாடா இணை தயாரிப்பாளராக இருந்து தயாரித்தார். அந்நாளில், இந்த படம் ரூ. 9 கோடி செலவில் உருவாக்கப்பட்டு வெளியானது, ஆனால் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இதனால், அதற்குப் பின்னர் அவர் எதுவும் தயாரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News