இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த தகவல் வெளியானது முதல் தற்போது வரை ரசிகர்களிடம் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆரம்பத்தில் இது ‛வடசென்னை 2’ என செய்திகள் வெளியாகின. ஆனால் இயக்குனர் வெற்றிமாறன் இப்படம் வட சென்னை 2 அல்ல மாறாக, வடசென்னையை மையமாகக் கொண்ட அதே காலக்கட்டத்தில் நடக்கும் வேறொரு கதை என தெளிவுப்படுத்தினார்.
சிம்புவின் 49வது படமாக உருவாகும் இந்த படத்தை கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கிறார். சமீபத்தில் புரோமோ ஷூட் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பாக ப்ரோமோவை படக்குழு வெளியிட்டுள்ளார்கள்.
சிம்பு கையில் கத்தியை பிடித்தபடி மாஸாக நடந்து வரும் காட்சிகள் இடம்பெற்றுள்ள புரோமோவில், மேலும் படம் குறித்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோ வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.