மோகித் சூரி இயக்கத்தில் அறிமுக நட்சத்திரங்கள் அஹான் பான்டே, அனீத் பட்டா மற்றும் பலர் நடிப்பில் கடந்த ஜுலை மாதம் 18ம் தேதி வெளியான படம் ‘சாயரா’. இப்படம் யாரும் எதிர்பார்க்காத விதத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது.

உலக அளவில் மொத்தமாக 550 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. இந்திய அளவில் தற்போது 400 கோடி வசூலைக் கடந்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சுமார் 40 கோடி செலவில் தயாரான படம் இந்த அளவிற்கு வசூலித்து பெரும் வரவேற்பைப் பெற்று ஆச்சரியப்படுத்தி உள்ளது.
இந்த 2025ம் ஆண்டில் அதிக வசூலைக் குவித்த இந்தியப் படங்களில் இந்தப் படம் இரண்டாம் இடத்தில் உள்ளது. 800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ‘ச்சாவா’ ஹிந்திப் படம் முதலிடத்தில் உள்ளது.