‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ திரைப்படத்திற்குப் பிறகு, நடிகர் தனுஷ் இயக்கும் புதிய படம் ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் அவர் கதாநாயகனாகவும் நடிக்கிறார். கதாநாயகியாக நித்யா மேனன் நடித்திருக்க, முக்கிய கதாபாத்திரங்களில் ராஜ்கிரண், சத்யராஜ், பார்த்திபன், அருண் விஜய் மற்றும் ஷாலினி பாண்டே ஆகியோரும் நடித்துள்ளனர். இப்படம் ‘டான் பிக்சர்ஸ்’, ‘வுண்டர்பார் பிலிம்ஸ்’, ‘ரெட் ஜெயண்ட் மூவிஸ்’ ஆகிய நிறுவனங்களின் கூட்டுத் தயாரிப்பாக உருவாகி வருகிறது. இசையை ஜி.வி. பிரகாஷ் அமைத்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் ஏற்கனவே 90 சதவீதம் முடிந்துவிட்டன. தற்போது மீதமுள்ள சில காட்சிகளை படமாக்கும் நோக்கில் படக்குழு பாங்காக்குக்கு புறப்பட்டுள்ளனர். தற்போது பார்த்திபன், சத்யராஜ், அருண் விஜய் ஆகியோர் பாங்காக்கில் இருக்கின்றனர் என்ற தகவலை உறுதி செய்யும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன. இதற்குப் பிறகு, நாளை தனுஷ், ஷாலினி பாண்டே மற்றும் குழுவினர் பாங்காக்குக்கு செல்லவுள்ளனர்.
அங்கு, சில வசன காட்சிகளுடன் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட இருக்கிறது. இந்த திரைப்படம் வரவிருக்கும் அக்டோபர் 1ம் தேதி திரைக்கு வர திட்டமிடப்பட்டுள்ளது.