“கஷ்டப்பட்டு – கஷ்டப்படுத்தி படம் எடுப்பார் வெற்றிமாறன்!”: நடிகர் மூணார் ரமேஷ்

புதுப்பேட்டை படத்தில் அறிமுகமான மூணார் ரமேஷ், தொடர்ந்து சிவாஜி, ஆடுகளம், விசாரணை இன்னும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தார். தற்சமயம் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்துள்ளார். இவர் ஒரு பேட்டியில் விடுதலை படப்பிடிப்பு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
“படம் மொத்தமும் காட்டுப் பகுதியில் படமாக்கப்பட்டது. அங்கு செல்வதற்கே மூன்று வண்டிகள் மாறி மாறி செல்ல வேண்டும். காடு மிகவும் சகதியாக இருப்பதால் ஜீப் வண்டியில்தான் காட்டிற்குள் செல்ல முடியும்.

இது மட்டுமின்றி பாம்பு, அட்டைகள், பூச்சி தொல்லை என பல தொல்லைகளுக்கு நடுவேதான் படப்பிடிப்பு நடந்தது. ஒரு படம் எடுக்க வேண்டும் எனில் அதை வெற்றிமாறன் சுலபமாக எடுக்கமாட்டார். மிகவும் கஷ்டப்பட்டு மற்றவர்களையும் கஷ்டப்படுத்தி, அதிகமாக உழைத்துதான் ஒரு படத்தை இயக்கி முடிப்பார்” என்றார் மூணார் ரமேஷ்.