‘ஆர்ஆர்ஆர்’ படத்திற்குப் பிறகு எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படமான் SSMB29 மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் தொடங்கி, பின்னர் கென்யாவில் நடைபெற்றது. தற்போது, குழுவினர் சிறிய இடைவெளியை எடுத்துள்ளனர்.

இந்த மாதம் இப்படத்தின் தலைப்பு குறித்து ஒரு அறிவிப்பை வெளியிட உள்ளதாக முன்பே கூறப்பட்டிருந்தது. அதன் படி, நவம்பர் 15ஆம் தேதி ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட விழா ஒன்றை நடத்தி, அதில் படத்தின் தலைப்பையும் அதற்கான சிறப்பு வீடியோவையும் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், அந்த நிகழ்ச்சியை ஒரு ஓடிடி தளத்தின் மூலம் நேரடியாக ஒளிபரப்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஒரு திரைப்பட விழா ஓடிடி தளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவது இது முதல் முறை என்பதால், இதற்கான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

