தெலுங்கு, தமிழ், ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் பிசியாக நடித்து வரும் நடிகை ஸ்ரீலீலா, தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சுதா கொங்கரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் தன்னுடைய திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என அவர் கூறியுள்ளார்.

அதுகுறித்து ஸ்ரீலீலா பேசியதாவது: “தெலுங்கில் நான் பல படங்களில் நடித்திருந்தாலும், ஆழமான, உணர்ச்சி நிறைந்த கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை. பெரும்பாலும் கிளாமர் வேடங்களிலேயே நடிக்க நேர்ந்தது. ஆனால் பராசக்தி படம் எனது நடிப்பு திறனை வெளிப்படுத்தும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் கிளாமர் கதாபாத்திரங்களால் எனக்கு ஒரு குறிப்பிட்ட பிம்பம் உருவாகிவிட்டது.
ஆனால் இந்தப் படம் அந்த பிம்பத்தை உடைக்கும் வகையில் இருக்கும். இது ஒரு பீரியட் கதையாக உருவாகி வருகிறது. இதில் இதுவரை ரசிகர்கள் பார்க்காத ஒரு புதிய ஸ்ரீலீலாவை காணப்போகிறார்கள். இதன் மூலம் என் மீது இருந்த கவர்ச்சி பிம்பம் மாறத் தொடங்கும் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

