பாகிஸ்தான் சென்றிருந்தபோது மொஹஞ்சதாரோவை பார்வையிட வேண்டும் என மிகவும் முயற்சி செய்தேன். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டது என அழுகை எமோஜியுடன் பதிவிட்டுள்ளார்.
2018ம் ஆண்டு பாகிஸ்தானின் காராச்சி நகரில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் ராஜமெளலி கலந்துகொண்டார். அப்போது அங்குள்ள வரலாற்று சிறப்புமிக்க இடங்களை சுற்றிப்பார்த்த அவர், அங்கு எடுத்த புகைப்படங்களையும் தனது டிவிட்டரில் ஷேர் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பாகிஸ்தானின் மொஹஞ்சதாரோவை பார்க்க ராஜமெளலிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும், SS ராஜமெளலி என்ற ஹேஷ்டேக்கையும் அவர்கள் ட்ரெண்ட் செய்து, இதுகுறித்து விவாதம் நடத்தி வருகின்றனர்.