லட்சுமிராயை அறிமுகப்படுத்தியவர்.. இன்று பிச்சை எடுக்கிறார்!

இயக்குனர் ஷங்கரிடம் காதலன், இந்தியன், ஜீன்ஸ் போன்ற படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் செல்வேந்திரன். பிறகு,  2009 ஆம்ஆண்டு ஒரு காதலன் ஒரு காதலி என்ற படத்தை இயக்கினார்.இந்த படத்தில்தான் லட்சுமி ராயை  சினிமா துறையில் அறிமுகம் செய்திருந்தார்.

படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை.  பிறகு செல்வேந்திரனுக்கு  சினிமா வாய்ப்பு  கிடைக்கவில்லை. இன்று அவர் ஒருவேளை சோத்துக்கே வழியில்லாமல் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.இந்த நிலையில்  யு டியுப் சேனல் ஒன்றில் பேசிய அவர், “சினிமா தான் என்னுடைய வாழ்க்கை.  தொடர்ந்து போராடுவேன். விஜய்க்காக கதை ரெடி பண்ணி வைத்திருக்கிறேன். கண்டிப்பாக அவரை வைத்து படம் எடுப்பேன்” என்று கூறியிருக்கிறார்.