ரிஸ்க் எடுப்பது கமலுக்கு ரஸ்க் சாப்பிடுவது மாதிரி. அப்படியான ஒரு படம்தான் அபூர்வ சகோதரர்கள். இப்படத்தில் அவர், குள்ள மனிதனாக கமல் நடித்திருப்பார். இது மிகவும் வரவேற்பு பெற்றது.
ஆனால் அதற்காக கமல் பட்ட பாடு கொஞ்சநஞ்சம் அல்ல.
தொழில்நுட்பம் வளராத அந்த காலத்தில் சிஜியில்லாமல் கமல் எப்படி செய்தார் என்பதே பெரும் ஆச்சரியம்.
அக்காட்சிகளுக்கு சில யுத்திகள் பயன்படுத்தப்பட்டன. . முதலில் நின்றப்படியே எடுக்கும் ஷாட்களுக்கு குழி தோண்டி முட்டிக்கு பிரத்யேகமான ஷூட் போட்டு எடுத்திருந்தனர். அதே போல, அவர் நடக்கும் காட்சிகளுக்கு நீள குழியை தோண்டி வைத்து எடுத்தனர். ஆனாலும் வீட்டின் உள்ளே எடுக்கும் காட்சிகளுக்கு கொஞ்சம் சிரமம் இருந்ததாம்.
மற்ற நடிகர்கள் 18 இன்ச் மேடையில் நிறுத்தி கமலுக்கு குழி தோண்டி நடிக்க வைத்தனராம். அதுமட்டுமல்லாமல், அப்பு கமல் காட்சிக்கு கேமராவும் குழிக்குள் இறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மு
கமலுக்கு பிரத்யேகமான காலை சகாதேவன் என்பவர் உருவாக்கி கொடுத்தார். அவர், “இதையெல்லாம் கேள்விப்பட்ட இயக்குநர் பாலசந்தர், “நீ ஒரு முக்கிய நடிகன். எசகுபிசகாக நடித்து, உடலுக்கு பிரச்சினை ஏற்படுத்திக் கொள்ளாதே” என எச்சரித்தார். ஆனால் கமல் கேட்கவில்லை.. அந்த சவாலான கதாபாத்திரத்தில் நடித்தே தீருவது என உறுதியாக இருந்தார். அதை நினைத்தால் இப்போதும் வியப்பாக இருக்கிறது” என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்தார்.
.