Touring Talkies
100% Cinema

Friday, May 16, 2025

Touring Talkies

ஏ.ஆர்.ரகுமானுக்கே பிடிக்காத பாட்டு!.. ஆனாலும் ஹிட்!  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் திரையுலகில் இசைப்புயல் என புகழப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். அவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களுமே ஹிட் தான். ஆனால் அவருக்கும் பிடிக்காத பாடல்.. அதுவும் அவரே இசை அமைத்த பாடல் ஒன்று உண்டு. ஆனால் அதுவம் ஹிட்.

கிருஷ்ணாவின் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகும் பத்து தல திரைப்படத்தில்தான் அந்த பாடல் இடம் பெற்று உள்ளது.

இது குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்த போது, “இந்த படத்தில் ஒரு காதல் காட்சிக்கு டூயட் பாடல் இசையமைக்க வேண்டும் என இயக்குநர் கிருஷ்ணா கேட்டார். நானும் ஒரு ட்யூன் போட்டேன். ஆனால் பிறகு அது எனக்கே பிடிக்காமல் போனது. ‘இது ஏதோ சோக சங்கீதம் போல இருக்கிறது, நாம் வேறு மியூசிக் போட்டுக்கலாம்’ என்றேன். வேறு வேறு ட்யூன் போட முயற்சித்தேன்.

ஆனால் கிருஷ்ணா, ‘இந்த பாடலே அருமையாக இருக்கிறது. இந்த ட்யூன்தான் வேண்டும்’ என்று பிடிவாதம் படித்தார். அந்த பாடல்தான், ‘முன்பே வா என் அன்பே வா..’ என்கிற பாடல்” என்றார் ஏஆர் ரஹ்மான்.

பத்துதல படத்தில் அனைத்து பாடல்களும் ஹிட் என்றாலும் இந்த பாடல்தான் சூப்பர் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

 

- Advertisement -

Read more

Local News