தயாரிப்பாளர் வசந்த் ராமசாமியின் ஸ்ரீஅன்னமார் புரொடக்சன்ஸ் மற்றும் இயக்குநர் S.P.ஹோசிமினின் ‘ஹோசிமின் புரொடக்சன்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் புதிய படம் ‘ரெயின்போ.’
இப்படத்தில் ‘BIGBOSS’ புகழ் நிரூப் ஏழு கதாநாயகிகளுடன் நடிக்கிறார். இப்படத்தின் ஏழு கதாநாயகிகளாக சிம்ரன் ராஜ், மற்றும் ஆறு முன்னணி கதாநாயகிகள் நடிக்கின்றனர். மற்றும் ‘மைம்’ கோபி, மனோபாலா, சார்லஸ் வினோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் இடம் பெறுகிறார்கள்.
ஒளிப்பதிவு – வினோத் குமார், இசை – சுபாஷ் ஆனந்த், பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன். இந்தப் படத்தை S.P.ஹோசிமினிடம் உதவி இயக்குநராக இருந்த விவேக் கைபா பட்டாபிராம் இந்தப் படத்தை இயக்குகிறார்.
பிரம்மாண்டமான பொருட்செலவில் காமெடி ஜானரில் தயாராகும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடர்ந்து 12 நாட்களாக நடைபெற்று முடிந்தது.
அடுத்தக் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் இந்த ’Rainbow’ படக் குழுவினர், இயக்குநர் மற்றும் நடிகருமான திரைக்கதை மன்னன் K.பாக்யராஜை சந்தித்து ஆசி பெற்றனர்.
குடும்பத்துடன் பார்த்து மகிழும் படமாக இந்த ‘ரெயின்போ’ உருவாகி வருகிறது.