ஆர்.ஜே.பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’ ரிலீஸ் தேதி!

கோகுல் இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கும் படம் ‘சிங்கப்பூர் சலூன்’. இதில் அவர்,  சிகையலங்கார நிபுணராக நடிக்கிறார். இந்த படத்தை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் பட நிறுவனம் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்கிறார். சுகுமார் ஒளிப்பதிவு செய்ய, விவேக் மெர்வின் இசையமைக்கிறார். சத்யராஜ், ரோபோ சங்கர், கிஷன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இந்த படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி ‘சிங்கப்பூர் சலூன்’ திரைப்படம் வருகிற ஜூலை மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.