தனக்குத்தானே சிறை! நடிகையின் சோகம்!

கரகாட்டம் படம் மூலம் பிரபலமடைந்த கனகா, தற்போது திரையுலகைவிட்டு ஒதுங்கி இருக்கிறார். இவர் குறித்து பத்திரிகையாளர் பாலு, “மறைந்த பிரபல நடிகை தேவிகாவின் மகள்தான் கனகா. தேவிகாவுக்கு தெரிந்த  தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய மகனை கனகாவுக்கு உதவியாளராக அனுப்பி வைத்தார். அவர் கனகாவுக்கு எல்லாமுமாய் இருந்து கிட்டத்தட்ட பழைய கனகாவை மீண்டும் கொண்டு வருவதற்கு முயற்சி செய்தார். இந்த நிலையில் தான் கனகாவின் மீது உதவியாளருக்கு காதல் ஏற்பட்டது.

ஆனால் கனகாவிற்கு உதவியாளர் தன்னை தவறாக நடத்த முயற்சிக்கிறாரோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. அவரை கூப்பிட்டு கண்டித்ததோடு, காவல் நிலையத்தில் சொல்லி விடுவேன் என்றும் மிரட்டினார்.

இதனால் அந்த உதவியாளர் கனகாவிடமிருந்து சென்று விட்டார். சில காலங்களுக்கு பிறகு அந்த உதவியாளர் தன்னை உண்மையாக நேசித்ததை கனகா புரிந்து கொண்டார். அம்மாவின் இறப்போடு, இந்த குற்ற உணர்வும் கனகாவை மிகவும் பாதித்துவிட்டது. மீண்டும் நிலைகுலைந்து போனார். மீண்டும் வீட்டுக்குள்ளேயே தன்னை சிறை வைத்து இருந்து கொண்டார்.” என்று  பாலு கூறியுள்ளார்.